0 0
Read Time:1 Minute, 47 Second

திருவெண்காடு அருகே, உள்ள திருநகரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.

மேலும், பஞ்ச நரசிம்மர் கோவில்களில் இரணியன் நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் சுவாமிகள் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த கோவிலில் அக்னி நட்சத்திர காலத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த 60 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட இந்த உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதனையொட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் கோவில் நந்தவனத்தில் எழுந்தருளினர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதனையடுத்து பாசுரங்கள் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து நந்தவனத்தில் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில், கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், உபயதாரர் சீனிவாசன், பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட வசந்த உற்சவம் தற்போது தொடங்கியுள்ளது, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %