குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான பன்றிகளின் அட்டகாசத்தை அடக்க பேரூராட்சி அதிகாரிகள் நிறைவேற்றம்.
குறிஞ்சிப்பாடியில் நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வந்து பன்றிகள் குழந்தைகளை கடிக்க வருவதாகவும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி பன்றிமேல் மோதி விபத்து ஏற்படுவதாகவும் வீடுகளில் உள்ள தோட்டங்களை தொம்சம் செய்து பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வந்ததால் பேருராட்சி அலுவலகத்திற்கும் பன்றியைப் பிடிக்க வேண்டுமென பலமுறை குறிஞ்சிப்பாடி பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.
பொது மக்களின் புகார்களை ஏற்று சில மாதங்களுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் குறிஞ்சிப்பாடி காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பன்றி வளர்க்கும் நபர்களை அழைத்து பொதுமக்களுக்கு பன்றிகளால் ஏற்படும் தொல்லைகளை அவர்களிடம் எடுத்து கூறி பன்றிகளை வெளிபகுதியில் மேயவிடாமல் வளர்க்க வேண்டும் எனவும் மீறி பன்றிகள் குறிஞ்சிப்பாடி பகுதியில் சுற்றித் திரிந்தால் எந்தவித அறிவிப்பும் இன்றி பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் இன்று குறிஞ்சிப்பாடி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கும் வேலையில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீண்டகால கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்கும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கும் பேருராட்சிமன்ற தலைவர் அவர்ளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்