0 0
Read Time:1 Minute, 45 Second

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில்,ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் சார்பில் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம் நடத்தி காட்டப்பட்டது.

திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் ஆகியோர் தலைமையில் இந்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

ரயில்வே பயணத்தின்போது அவசியமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தக்கூடாது. எதிர்பாராதவிதமாக நடுவழியில் ரெயில் நிற்கும் போது கீழே இறங்கி நிற்கக்கூடாது. தண்டவாளத்தின் வழியாக நடக்கக்கூடாது.

ரயிலில் பயணம் செய்யும் போது மற்ற பயணிகளிடம் இருந்து பிஸ்கட் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடாது. தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கக்கூடாது.

ரெயில் விபத்து நேரிடும்போது எவ்வாறு மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நாடகத்தில் சைகை மூலம் நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை ரயில் பயணிகள் பலர் பார்த்து பயனடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %