1 0
Read Time:2 Minute, 58 Second

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பாமா தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில், வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் உழவன், திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும். பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட புதிதாக இடம் தேர்வு செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராஜா கார்த்திகேயன்(அ.தி.மு.க):- வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
முத்துக்குமார்(பா.ம.க):- எனது பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து தர வேண்டும்.

கவிதா (தி.மு.க):-வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூடுதலாக வசதி செய்து தரவேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

இதேபோல, அ.தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் பிரியங்கா, மீனா ஆகியோர் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து தலைவரிடம் மனு கொடுத்தனர்.

தலைவர்:-பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசிடமிருந்து கூடுதல் நிதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

துணைத் தலைவர்:-வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட புதிய இடம் தேர்வு செய்யப்படும் என்றார். கூட்டத்தில் துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %