சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை அமைக்கப்பட உள்ளதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சிதம்பரம் நகராட்சி நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நவீன காய்கறி சந்தை அமைக்க பணிகளை அதனைத் தொடர்ந்து வகாரமாரி குடிநீர் தேக்க ஏரிஆய்வு செய்தார் ஆய்வின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கோட்டாட்சியர் ரவி சிதம்பரம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன்நகராட்சி பொறியாளர் மகாதேவன் உடன் இருந்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் அதன் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூபாய் 328 கோடியில் விரிவாக்கப்பட உள்ள பணிகளை தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார் இந்நிகழ்ச்சியின் திமுக நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன் நகராட்சி கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் மணிகண்டன் சுதாகர் ராஜன் அப்பு சந்திரசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி