0 0
Read Time:2 Minute, 27 Second

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்றனர். தொடர்ந்து, மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தில் செவிலியர் குடியிருப்பு, மருத்துவ கட்டிடங்களை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 136 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 67 லட்சத்து 47ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு டயாலிசிஸ் கருவிகளும் மன்னார்குடியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் புகார்களை தெரிவிக்க புகார் மையம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், “.திருவாரூர் மாவட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவுகளில் விபத்து குறித்த தரவுகளை பதிவேற்றம் செய்ய சுமார் 5 லட்சம் செலவில் புதிய சாப்ட்வேர் ஒன்று உருவாக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும், “தக்காளி வைரஸ் நோய் தமிழகத்தில் பரவியதாக வரும் தகவல்கள் வெறும் வதந்திதான். இதுவரை தமிழகத்தில் யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் ஏற்படவில்லை” என்றும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %