0 0
Read Time:4 Minute, 3 Second

கொள்ளிடம், மே- 14;
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ரூ.89.83 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியந்துரை, காட்டூர், மேகந்திரபள்ளி, ஆலாலசுந்தரம், பனங்குடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், புளியந்துரை கிராம ஊராட்சி பெரிய தெரு பகுதியில் ரூ.9.95 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், ரூ.1.85 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று நூலக புதுப்பிக்கும் பணிகளையும், ரூ.4.65 இலட்சம் மதிப்பீட்டில் 15 வது நிதிக்குழு திட்டத்தில் நடைபெற்ற சமத்துவ இடுகாடு பணிகளையும், ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கழிவுநீர் போக்கு குழி பணிகளையும், ரூ.2.76 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாரத பிரமதரின் வீடு கட்டும் திட்ட பணிகளையும், காட்டூர் கிராம ஊராட்சியில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று முடிந்த தடுப்பணை பணிகளையும்,

ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் நீர் உறுஞ்சும் குழி வெட்டும் பணிகளையும், ரூ.1.8 இலட்சம் மதிப்பீட்டில் நூலக புதுப்பிக்கும் பணிகளையும், மகேந்திரபள்ளி கிராம ஊராட்சியில் தலா ரூ.2.76 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.8.82 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாரத பிரமதரின் வீடு கட்டும் திட்ட பணிகளையும், ரூ.16,52 இலட்சம் மதிப்பீட்டில் சிவன்கோயில் தெரு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று சாலை பணிகளையும், ரூ.5.14 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று பள்ளியில் கழிவறை கட்டும் பணிகளையும். ரூ.1.89 இலட்சம் மதிப்பீட்டில் நூலக புதுப்பிக்கும் பணிகளையும் ஆக மொத்தம் ரூ.89,83 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %