இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள வந்த இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த பொது தீட்சிதர்களை கைது செய்யக்கோரி சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என் ராதா நகர்மன்ற உறுப்பினரும் மாவட்ட மூத்த துணைத் தலைவருமான தில்லை.ஆர்.மக்கின் மாவட்ட துணை தலைவர் ஆர். சம்மந்தமூர்த்தி மாவட்ட செயலாளர்கள் ஆர்.வி.சின்ராஜ் ஆட்டோ டி.குமார்
ஆகியோர் கையெழுத்திட்ட புகார் மனுவை சிதம்பரம் உட்கோட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜிடம் வழங்கினார்கள்
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பக்தர்கள் பொது பொதுமக்கள் ஆகியோர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து தமிழக முதலமைச்சர்மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோருக்கு இக்கோவிலில் ஜெயஷுலா என்ற பெண்மணி தாக்கப்பட்ட நிகழ்வு உள்பட பல்வேறு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை) வழிப்பட அனுமதிக்க கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதனடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதியரசர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் முறைகேடுகள் நடைபெற்றால் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறைக்கி வந்த புகாரின் அடிப்படையில் துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த மே 10ஆம் தேதிகடிதம் கொடுக்க சென்றபோது பொது தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப்பட்ட செயல் வேதனைக்குரியது
இந்து சமய அறநிலைத்துறை அரசு அதிகாரிகளின் பணியை செய்ய விடாமல் தடுத்து அனுமதிக்க மறுத்த ஸ்ரீ சபாநாயகர் கோவில் நிர்வாகிகள் மற்றும் தீட்சிதர்கள் மீது உடனடியாக காவல்துறை வழக்கு தொடுத்து கைது செய்ய வேண்டும்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கையில் தீட்சிதர்கள் ஈடுபட்டால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெமினி எம்.என். ராதா கூறியதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரடி கள ஆய்வு சட்டபூர்வமாக அவர்கள் மீது படி படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். அமைச்சர் கூறியதை பக்தர்களும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர் சேகர்பாபுவே நேரடியாக செல்ல உள்ளதால் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் மணம் குளிர கூடிய அளவில் நல்ல முடிவாக இருக்கும் என்று கூறினார்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி