0 0
Read Time:2 Minute, 43 Second

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் மாணவ – மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து, மே, 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. நேற்றுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 20-ஆம் தேதி, இரவு 9 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆயுதப்படை, நர்சிங் கல்லூரிகளில் B.Sc., நர்சிங் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கல்லூரிகளில் நர்சிங் படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க ஏதுவாக அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 20-ஆம் தேதி, இரவு 9 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆயுதப்படை, நர்சிங் கல்லூரிகளில் B.Sc., நர்சிங் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கல்லூரிகளில் நர்சிங் படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க ஏதுவாக அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %