கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் பணி நிறைவு செய்யப்பட்ட ஊழியர்கள் மூன்று நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள் பணி நிரவல் ஊழியர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைக்க வேண்டும் இல்லை எனில் சுழற்சி முறையில் பணி நிரவல் செய்து அந்த ஊழியர்களை பல்கலைக்கழகம் பணிக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பணி நிரவல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பூமா கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர் பணி நிரவலின்போது பல்கலைக்கழக நிதி நிலை கருத்தில் கொள்ளாமல் மிகவும் குறைவான ஊதியம் பெறும் சி.டி பிரிவு ஊழியர்களை முதலில் பணி நிறைவு செய்தனர் ஆனால் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களை 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பணி நிரவல் செய்து வருகின்றனர் பணியாளர்களை அடையாளம் காணப்பட்ட அதிக ஊதியம் பெறும் ஏ.பி பிரிவு ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி நிரவல்செய்யப்படவில்லை எனவும்
2017ஆம் ஆண்டு பணி நிறைவு செய்யப்பட்ட சி டி பிரிவு ஊழியர்கள் மூன்று ஆண்டுகளாக ஒப்பந்தம் இரண்டு முறை நீடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவரது வாரிசுகளுக்கு எவ்வித பலனும் பணி ஆணை வழங்கப்படவில்லை ஒப்பந்த ஊழியர்கள் வரும் 22ஆம் தேதி ஒப்பந்தம் முடிவடைகிறது ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மேலும் நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி