மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களுடைய கோரிக்கை மனுக்களை பெறுதல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சி தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரும் சீர்காழி வருவாய் கோட்ட அலுவலருமான திரு. நாராயணன் அவர்களின் தலைமையில் துவங்கியது.
மேற்படி நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட மேலையூர் சரகத்தில் உள்ள கஞ்சாநகரம், கருவாழக்கரை, மேலையூர், மேலப்பெரும்பள்ளம், கீழையூர், கிடாரங்கொண்டான், கீழப்பெரும்பள்ளம், தலையுடையவர் கோயில் பத்து உள்ளிட்ட 12 கிராமங்களுக்கான வருவாய் கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற முதியவர்கள் இரண்டு நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், வயது முதிர்ந்த ஆதரவற்ற விதவைகள் 15 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும் வருவாய் கோட்ட அலுவலர் நாராயணன் அவர்களால் வழங்கப்பட்டது.
ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளரும் வட்டாட்சியருமான சண்முகம், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் இந்துமதி, நில எடுப்பு தனி வட்டாட்சியர் சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் கவிராகவி, உதவி தோட்டக்கலை அலுவலர் ஜோவிதா மற்றும் இதர துறையை சேர்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறிப்பு:
18 & 19.05.22 – செம்பனார்கோவில் உள்வட்டம்,
20 & 24.05.22 – திருவிளையாட்டம் உள்வட்டம்
25 & 26 .05.22 – தில்லையாடி உள்வட்டம்
செய்தியாளர்:க சதீஷ்மாதவன்