கட்டமைப்புவியல் துறையில் மாணவர்களால் ஏற்ப்பாடு செய்த கல்லூரி மாணவ மாணவியருக்கான கருத்தரங்குSTRESS 2K22 (STRUCTURAL ENGINEERING STUDENTS SYMPOSIUM)நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இருந்தும், மற்ற கல்லூரிகளில் இருந்தும் கலந்து கொண்டனர். இருபதுற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் பற்றி கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. விழாவின் வரவேற்புரையை கட்டமைப்பு துறையின் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர்B.விடிவெள்ளி அவர்கள் வழங்கினார்கள்.
விழாவினை பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் முனைவர் A.முருகப்பன் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார் கேஸ்தானா இன்பராஸ்க்ட்சர்ஸ் லிமிடெட், சென்னையின் நிர்வாக இயக்குனர் பொறியாளர் V.ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்குகொண்டு மாணவர்களின் திறனாய்வு பற்றியும், இன்றைய வேலைவாய்ப்பு தருபவர்களின் எதிர்பார்ப்பு பற்றியும் உரையாற்றினார். விழாவின் முடிவில் கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவு விழா மாலையில் விவசாயபுல முதல்வர் பேராசிரியர் K.R.சுந்தரவரதராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவின் நன்றியுரையை இணைப்பேராசிரியர் முனைவர் R.சிவகாமசுந்தரி வழங்கினார். விழா ஏற்பாட்டினை பேராசிரியர் முனைவர் R.பாஸ்கர் செய்திருந்தார்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி