தரங்கம்பாடி, மே- 21;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகள் மற்றும் நீடித்தல் புனரமைத்தல், நவீன படத்திலிருந்து நிகில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்பனார்கோவில் வட்டாரம் மேமாத்தூர் கிராமத்தில் வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் ரூ.24 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியையும் கழனிவாசல் வடகுடி வாய்க்கால் ரூ.24 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் வாய்க்கால் தூர்வாரும் பணி, திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்கால் ரூ.5.50 லட்சம் செலவில் தூர்வாரும் பணியில் அனந்தமங்கலம் கண்ணப்பன் மூளை வாய்க்கால் ரூ.2.50 லட்சம் செலவில் தூர்வாரும் பணியில் தொடர்ந்து நீடித்தல் புனரமைத்தல் மற்றும் நவீன படுத்துதல் திட்டத்தின்கீழ் மேமாத்தூர் ஹரிஜன் கடை மடை மதகு ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் பணி, மாத்தூர் கார் வேலி கீழ் குமரி ரூ.75 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் பணி, சிந்தாமணி மஞ்ச வாய்க்கால் கடைமடை நீர் ஒழுகி உருவாகி ரூ.40 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் பணியையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து பணிகளை விரைவாக முடிக்குமாறும் தண்ணீர் திறப்பதற்கு முன் அனைத்து வாய்க்காள்களும் தூர்வாரும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது நீர்வளத் துறை செயற்பொறியாளர் வே.சண்முகம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் கண்ணப்பன், பாண்டியன், உதவி பொறியாளர்கள் வீரப்பன், சுப்பிரமணி, சரவணன், கண்ணதாசன் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.