0 0
Read Time:3 Minute, 56 Second

நீட் விலக்கு சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிலக்கு ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்னாள்
மாணவர்கள் பேரவையின் ஏற்பாட்டில் கல்வி மற்றும் பல்துறை பயிற்சி மையத்தை
தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்து
பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையின்படி உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழக முதலமைச்சருடன கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடந்து கூட்டத்தொடரில் 314 கோடி ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கினார். அதுமட்டுமில்லாமல் தற்போது இலங்கையில் இருக்கக்கூடிய பிரச்சனையை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயேமுதல் மாநிலமாக தமிழ்நாடு இலங்கை மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை தமிழக முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளதாக கூறினார்.

தொர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை பொருத்தவரை தமிழக முதலமைச்சர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே ஜனாதிபதி வரை செல்லாத நீட் எதிர்ப்பு மசோதா தற்போது தமிழக முதல்வரின் அழுத்தத்தால் ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வு நடைபெறும் என்று இருப்பின் தங்களது துறை சார்பாக அந்தந்த பள்ளிகளில் ஹைடெக் லாப் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. குழந்தைகளை எந்த வகையிலும் தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மையம் செயல்பட்டு வருகிறது. நீட் விலக்கிற்காக சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஆன்லைனில் பாடம் கற்கும் மாணவர்களுக்கு இடையூறாக வரும் காட்சிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதே தடை செய்யப்பட்டு தான் வருகிறது. வயதின் அடிப்படையை வைத்து தான் ஒவ்வொரு செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பு என்பது கட்டாயம் கிடையாது. தற்பொழுது பள்ளிக்கூடங்கள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளது. வரக்கூடிய கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் வரும்பொழுது இந்த ஆன்லைன் வகுப்பு படிப்படியாக
குறைந்துவிடும் என தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %