0 0
Read Time:1 Minute, 32 Second

தரங்கம்பாடி,மே.23: மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே இலுப்பூர் சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

இலுப்பூர் கிராமத்தில் சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
தீமிதி உற்சவத்தை முன்னிட்டு வீரசோழன் ஆற்றாங்கரையில் இருந்து மேளம் முழங்க கரக ஊர்வலம் துவங்கியது. அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. அங்கு தீக்குண்டத்தில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

படவிளக்கம்: இலுப்பூர் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகண்டு தீ மிதித்தனர்

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %