மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் 120 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா நலத்திட்ட உதவி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் (ஜமாபந்தி) நிறைவு நாளில் 120 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கான ஆணைகள், இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா வழங்கினார்.
ஜமாபந்தி நிறைவு நாளில் பல்வேறு ஆணைகளை வழங்கிய பின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசியதாவது
மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் 1431-ஆம் பசலி (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை வட்டத்திற்கு ஜமாபந்தி அலுவலராக கடந்த 17.05.2022 முதல் 24.05.2022 வரை நான் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டேன். 17.05.2022 முதல 24.05.2022 வரை 297 மனுக்கள் பெறப்பட்டு 120 மனுக்கள் உரிய விசாரனைக்குப் பின் தீர்வு காணப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. தகுதியின்மை அடிப்படையில் 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 150 உரிய விசாரனைக்குப் பின் தீர்வு காணப்படும். குறிப்பாக முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் போன்றவை கேட்டு மனுக்கள் பெருபான்மையாக பெறப்பட்டு 120 மனுக்களில் 60 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, 44 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 50 மனுக்கள் பெறப்பட்டு 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 24 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் 117 மனுக்களும், சீர்காழி வட்டத்தில் 92 மனுக்களும், தரங்கம்பாடியில் 101 மனுக்களும், குத்தலாம் வட்டத்தில் 56 மனுக்களும் ஆக மொத்தம் 4 வட்டங்களிலும் 366 மனுக்கள் பெறப்பட்டு உரிய விசாரனைக்கு பின் தீர்வு காணப்படும். குறிப்பாக இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம், ஆகியவை தொடர்பாக பெருபான்மையான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நிறைவு நாளில் 13 கிராமங்களில் மனுக்கள் பெறப்படவுள்ளது. அதற்கு அரசின் விதிகளுக்குட்பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) முருகேசன், மயிலாடுதுறை வட்டாட்சியர் ர.மகேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் தையல்நாயகி, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா, மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.சுகன்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, பல்வேறு கிராம வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.