கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட எஸ்கேவி மகளிர் கலை அறிவியல் கல்லூரி அருகே பெரிய ஏரியில் இருந்து குருவப்பன்பேட்டை ஏரிக்குச் செல்லும் சிறிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கரைகள் பன்றி வளர்ப்பவர்களின் ஆஸ்தான இடமாக மாறி வருகிறது இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள அனைத்து பிராய்லர் கோழி விற்பனை கடைகளில் வரும் கோழி குடல் தோல் இறக்கை கால் தலை உள்ளிட்ட அனைத்து கோழி கழிவுகளையும் பன்றி வளர்ப்பவர்கள் பேரல் பேரல் களாக பெற்று பன்றிகள் கூடாரமாக மாறிவரும் சிறிய வாய்க்கால் கரையில் பொது இடத்தில் மலைபோல் பன்றிகள் உணவுக்காக குவித்து கொட்டி வைத்துள்ளனர் என புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பன்றிகள் தெருநாய்கள் காக்கைகள் உள்ளிட்டவை அதிக அளவில் கோழியின் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக குவிந்து உள்ளது மேலும் தெருநாய்கள் காக்கைகள் கோழி குடல்கள் மற்றும் இறைச்சி கழிவுகளை குடியிருப்பு பகுதி முழுவதும் எடுத்துச் சென்று பரப்பி வருகிறது. மேலும் பச்சை இறைச்சி கறியை உண்ட தெருநாய்கள் அப்பகுதியில் வெறிபிடித்து திரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் வழியில் செல்வோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர் மேலும் இறைச்சி கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது எனவும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை தலையிட்டு அப்பகுதியை சுத்தம் செய்யவும் மேலும் கோழி கழிவுகள் கொட்டப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்