சிதம்பரம்: கிள்ளை பகுதியில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று லாரி மூலம் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி 10-வது வார்டில் நடைபெற்றது. இந்த பணியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக் குமார், துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை களை தரம் பிரித்து வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அப்போது செயல் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் செல்வராஜி மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,துப்புரவு பணியா ளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி