1 0
Read Time:1 Minute, 46 Second

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 03/06/2022 காலை 9.30 மணிக்கு தொண்டாமுத்தூர் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது ஆண்டு பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கியும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் மளிகை பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மன்றத் தலைவர் டாக்டர் எம். சிவக்குமார் தலைமையேற்றார்.
பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மு.ப.நடராஜ் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ரமேஷ், சமூக ஆர்வலர் சி.வருண் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் , இனிப்பு வழங்கினர்.
தி.மு.க நகரச்செயலாளர் டி.வி.குமார்,.டி.ஏ. சந்திரமோகன், கவுன்சிலர் வைரம் செந்தில்குமார், குருகுலம் என் முருகன், எம்.தனலட்சுமி, தருண், ஏ.கந்தவேல், புரட்சி மாணிக்கவாசகம், முன்னாள் கவுன்சிலர் சிவா, டி.எம்.ஐங்கரமூர்த்தி, லயா ஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.
விழா நிறைவாக எஸ்.ஷைனிசிவக்குமார் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %