கடலூர் மாவட்டம் குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமை வர்த்தக சங்கத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வரவேற்புரை ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் வாழ்த்துரை செயலாளர் மணிவண்ணன் பொருளாளர் ராஜேந்திரன் சிறப்புரை மாவட்ட செயலாளர் வீரப்பன் ஆகியோர் கலந்துகொண்டு குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவன்னியூர் கிராமத்தில் அரசு கலைக்கல்லூரி அமைவதற்கு நிலத்தை தானமாக வழங்கிய ஐயா திரு எம்ஆர்ஆர். சேதுராமன்பிள்ளை அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து மாலை அணிவித்து கேடயம் வழங்கினர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களின் திரு கரங்களால் விருது பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புனுடைய மாவட்டத் தலைவர் திரு சண்முகம் அவர்களுக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கினர் மற்றும் கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்த கண் மருத்துவர் இளையராஜா அவர்களைப் பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் வழங்கினர் .
முன்னதாக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு 61 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்று ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் மூலம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் நிகழ்ச்சியின் இறுதியாக துணைத் தலைவர் KKS பார்த்தசாரதி நன்றியுரை கூறினார் உடன் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் குமரவடிவு TC.பாண்டியன் பாலமுருகன் குணபாலன் செந்தில் பாலாஜி பிரதீப்ஜெயின் மாதவசாமி குட்டிமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்:பாலாஜி