Read Time:1 Minute, 17 Second
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 39,31,900 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர ஸ்கூட்டர், தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. லலிதா இ.ஆ.ப பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர், ராஜ்குமார் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்