0 0
Read Time:2 Minute, 39 Second

சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் அமரர் மிஸ்ரிமல் மகாவிர் சந்த் ஜெயின் நினைவாக சிதம்பரம் கமல்தீப் நிறுவனத்தார் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், நகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.ராமநாதன், அ.இ.அ.தி.மு கழக நிர்வாகிகள் மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், பொருளாளர் தோப்பு கே.சுந்தர், இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், நகர அம்மா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட மாணவரணி பொருளாளர் சங்கர், பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வசந்த், நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, வார்டு செயலாளர் வீரமணி, நிர்வாகிகள் சுந்தரம், ரவிச்சந்திரன், பக்கிரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கத் தலைவர் பாண்டியன், செந்தில்குமார், பொருளாளர் சம்பத், வட்டார தலைவர் நாகராஜன், மிஸ்ரிமல் மஹாவீர்சந்த், ஜெயின் டிரஸ்டின் தலைவர் கமல்கிஷோர் ஜெயின், தீபக்குமார் ஜெயின் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். முகாமில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர் குனால் மற்றும் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %