மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மண்ணையும் மனிதத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சிறந்த சேவை செய்து வருகிறது. விழா நிகழ்வில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் முன்னிலை வகிக்க, இருசக்கர வாகன பழுது நீக்கும் நல சங்கம் மாவட்ட தலைவர் பகவதி குமார் தேசியக் கொடியினை ஏற்றி மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வில் புவி வெப்பமாதலை தவிர்ப்பதற்கும் இயற்கையைக் காக்கும் பொறுப்பு நமது கடமை என்று வலியுறுத்தி பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற்கு எடுத்துரைத்தனர் மயிலாடுதுறை மயூரநாதர் மேலவீதி மற்றும் நகர்ப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து ஜோதி பவுண்டேஷன் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் செந்தில் பக்கிரிசாமி Aமூர்த்தி சந்தோஷ் குமார் ஆதவன் மற்றும் சமூக சேவகர்கள் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.