0 0
Read Time:1 Minute, 57 Second

75-வது சுதந்திர தின விழாவான நேற்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட, மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 8.30 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சிலர், கோவில் இராஜகோபுரத்தின் மீது ஏறி அனுமதியின்றி கோபுரத்தில் தேசிய கொடியை ஏற்றினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர்.அதற்குள் கொடியை ஏற்றியவர்கள், அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையே கோவில் நிர்வாகிகளும் அங்கு திரண்டு வந்தனர். அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தாலும், அதனை அகற்றாமல் சென்றனர்.

இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மற்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: ஸ்ரீதர், கடலூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %