மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 16;
மயிலாடுதுறை மாவட்டம், கீழநாஞ்சில்நாடு, மூவலூர், தலைஞாயிறு, தெண்ணாம்பட்டினம், தரங்கம்பாடி, ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/சட்டமன்ற உறுப்பினர் (மன்னார்குடி) முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்களான சட்ட மன்ற உறுப்பினர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளுர்), அம்மன் கே.அர்சுணன் (கோயமுத்தூர் வடக்கு), இரா.அருள் (சேலம் மேற்கு), க.அன்பழகன் (கும்பகோணம்), டி.ராமச்சந்திரன் (தளி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்சங்கோடு) ஈ.பாலசுப்பிரமணியன் (சேலம் மேற்கு), எஸ்.ராஜகுமார் (மயிலாடுதுறை), செல்லூர் கே.ராஜு (மதுரைமேற்கு) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மன்ற பேரவையின் 2021-2023-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்ட மதிப்பீட்டுக்குழு (16-வது பேரவை) 24.06.2022 அன்று அமைக்கப்பட்டது. மதிப்பீட்டுக்குழு என்பது, தமிழ்நாடு சட்ட மன்றத்தால் அமைக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். தமிழ்நாட்டில் அரசுத்துறைகளின் செலவு மற்றும் நிதி பயன்பாடு ஆகியவற்றின் செயல்பாடு குறித்து இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது.
அந்தவகையில் ஒவ்வொறு வருடமும் சில முக்கியத்துறைகளை தேர்ந்தெடுத்து அந்த துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும். அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக்குழு மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கீழநாஞ்சில்நாடு பகுதியில் பாதாள சாக்கடை நீருந்து நிலையத்தையும், மூவலூரில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 4 கோடியே 40 லட்சம் செலவில் காவிரியாற்றின் குறுக்கே மாப்படுகை கடலங்குடி சாலையில் பாலம் கட்டும் பணியினையும், தொழில்துறையின் சார்பில் இயங்கக்கூடிய தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பான பணியையும், சீர்காழி வட்டம் எருக்கூர் நவீன அரிசி ஆலையையும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தெண்ணாம்பட்டினத்தில் ரூ.43 கோடியே 40 லட்சம் செலவில் திருமுல்லைவாசல் கீழமூவர்கரை வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் குறுக்கே பாலம் கட்டுதல் மற்றும் சாலை, சாலை மேம்பாட்டுப்பணியினையும், பூம்புகார் சுற்றுலா மையத்தை உலக சுற்றுலா தரத்திற்கு இணையாக கொண்டு வருவதற்கான மேம்பாட்டு பணிகளையும் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட டேனிஷ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும், புது எருசலேம் ஆலயத்தின் பகுதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் மன்னம்பந்தல் ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை ஆகிய துறைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், அதன் மதிப்பீடுகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் பா.சுப்ரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் முருகண்ணன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி, இணை இயக்குநர் வேளாண்மைத்துறை சேகர் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா (மயிலாடுதுறை), உ.அர்ச்சணா (சீர்காழி) இயக்குநர் நெடுஞ்சாலைத்துறை இந்திரன், அவர்கள், மயிலாடுதுறை நகராட்சி உதவி ஆணையர் செல்வபாலாஜி அவர்கள், நகர்மன்றத்தலைவர்கள். ஒன்றியக்குழுத்தலைவர்கள், பேரூராட்சித்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல்துறை, மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.