0 0
Read Time:4 Minute, 12 Second

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 23;
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவையின் 35-ஆம் ஆண்டு விழா ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மூத்த குடிமக்கள் அவைத் தலைவர் நல்லாசிரியர் டி.எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் தியாகராஜன், பொருளாளர் கலியபெருமாள், துணைத்தலைவர்கள் செல்வம், அருணாச்சலம், வீராசாமி, துணை செயலாளர்கள் சையத் உசேன், லூர்துராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணசாமி, முருகையன், குத்தாலம் ராஜ் வித்யாலயா கல்விக் குழும தலைவர் பாண்டியன், குருஞானசம்பந்தர் பள்ளி முதல்வர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல் நிகழ்வாக மூத்த குடிமக்கள் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட மயிலாடுதுறை திருக்குறள் பேரவை செயலாளர் நல்லாசிரியர் செல்வகுமார் தலைமையில் மூத்த குடிமக்கள் அவையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த குடிமக்கள் அவைத் தலைவர் கே.செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், மூத்த குடிமக்கள் அவையின் புதிய தலைவர் கே.செல்வம் வரவேற்புரையாற்றினார். செயலாளர் புலவர் தியாகராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ரயில் மஸ்தூர் கலியபெருமாள் ஆண்டு வரவு செலவு கணக்கு வாசித்தார்.

மயிலாடுதுறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையாற்றி வரும் அருண்பிரியா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மூத்த நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இரா. செல்வத்திற்கு மக்கள் மருத்துவர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, 80 வயது நிரம்பிய உறுப்பினர்கள் வீராசாமி, சுவாமிநாதன், சண்முகம், பாலசுப்பிரமணியன், முனைவர் இளங்கோவன், கலியபெருமாள், நல்லாசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டப் பெற்றனர். மேலும், ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அரசு பொது தேர்வில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புகளில் முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருவாவடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் முனைவர் செந்தில்நாதன் மூத்தோர் வாய் சொல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மூத்த வழக்கறிஞர் சிவ புண்ணியம், வணிகர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், அன்பே சிவ அறக்கட்டளை சிவஸ்ரீ பாலசுந்தர சிவாச்சாரியார், காங்கிரஸ் நிர்வாகி பண்ணை சொக்கலிங்கம், மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தாசிஸ்ராஜ் அடிகளார், ஹாஜி உஸ்மான் அசரத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணை செயலாளர் சையது உசேன் நன்றியுரையாற்றினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %