0 0
Read Time:2 Minute, 12 Second

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கும் சார்பில், என் குப்பை, ஏன் பொறுப்பு என்ற விழிப்புணர்ச்சி மற்றும் தூய்மை பணியாளருக்கு பாராட்டு சான்றித வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி வரவேற்றார், இதில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் கே. ஆர். செந்தில்குமார், கலந்துகொண்டு சிறப்புரையாற்றி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணைத் தலைவர் முத்து , கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் வர்த்தகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தூய்மையாக செயல்படுவதற்கான ஹோட்டல் உரிமையாளரிடம் நற்சான்றுகளை நகர மன்ற தலைவர் வழங்கினார்.

சிதம்பரம் மூர்த்தி கபே உணவகத்தில் அவற்றின் உரிமையாளருக்கு நற்சான்றிதழ்களை நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரமன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் ஏ ஆர் சி மணிகண்டன் சித்ரா பாலசுப்பிரமணியன் லதா சுதா குமார் தரணி அசோக் ராஜன் சரவணன்மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் இளைஞரணி அமைப்பாளர் அருள் கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %