தரங்கம்பாடி,ஆக.30:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து என அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வைத்தார்.
இதில் அதிமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகத்தின் நிர்வாக சீர்கேட்ட கண்டித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டம் 2022-2023 ஆண்டுகளுக்கான திட்டங்களை அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து செலவிடப்படும் செலவினங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று செயல்படுத்த வேண்டும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனாளிகளுக்கு மானிய விலையில் வழங்கும் கம்பி, சிமெண்ட் மூட்டைகளை முறையாக வழங்க வேண்டும்.
ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொது நிதியிலிருந்து உரிமை தொகையை வழங்கவேண்டும்.
கிராம வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றவும் வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்