0 0
Read Time:2 Minute, 2 Second

தரங்கம்பாடி,ஆக.31:
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

தரங்கம்பாடி தாலுக்கா உட்பட்ட எரவாஞ்சேரி, நல்லாடை, இலுப்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக பாரதிய ஜனதா கட்சியின் ஊர்வலமாக பாரதிய ஜனதா மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் அழகிரிசாமி தலைமையில் இலுப்பூர் கடைவீதிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக வேல் விநாயகர், கண் விநாயகர், அரசு விநாயகர், சுதா விநாயகர், சித்தி விநாயகர் உள்ளிட்ட 5 பிள்ளையார் சிலைகள் புதன்கிழமை மாலை முனிவலவன்குடி வீரசோழன் ஆற்றில் கரைக்கப்பட்டது.பிள்ளையார் ஊர்வலத்தின்போது பல்வேறு இடங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

ஊர்வலத்தின்போது எந்தவித அசம்பாவிதம் நடக்காதவாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வசந்தராஜன் , பழனிச்சாமி,ஜோ.லாமேக் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் சதீஷ், சிங்காரவேலன் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %