0 0
Read Time:3 Minute, 31 Second

மயிலாடுதுறை, செப்டம்பர்-04;
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிப்பின்படி 2022-ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் 17.09.2022 அன்று பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி/பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000/- பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப் போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் தெரிவு செய்து அனுப்பவேண்டும்.

6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாகப் பள்ளிகளிலேயே பேச்சுப் போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒருவர் எனத்தெரிவு செய்து மாணவர்களை அனுப்பி வைத்தல் வேண்டும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.

போட்டிகள் மயிலாடுதுறை தருமபுரம் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 17.09.2022 அன்று நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கும் கல்லூரி மாணவர்கள் பிற்பகல் 2.00 மணிக்கும் வருகையை உறுதி செய்திடுதல் வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி/கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %