0 0
Read Time:3 Minute, 29 Second

மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோவில் குலதெய்வமாக உள்ளது. அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்கு இக்கோவில் குலதெய்வ கோயிலாகும். சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 -ஆண்டுகளை கடந்து விட்டதால் கோயில் புணரமைத்து துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வெகு விமர்சையாக யாகசாலை பூஜை நடைபெற்று வந்தது.

திங்கட்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது. துர்கா ஸ்டாலின் அவரது மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் ஸ்டாலின் மைத்துனர் மருத்துவர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோவில் விமான கல சம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது .
இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா, நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் .

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %