Actor Director K Bhagyaraj at the Sathuranga Vettai Audio Launch
0 0
Read Time:3 Minute, 37 Second

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தலைவராக இயக்குநர் பாக்யராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகரை பின்னுக்கு தள்ளி பாக்யராஜ் வெற்றி பெற்றார்.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தேர்தல் வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

பாக்யராஜ் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குநர் பாக்யராஜூம், துணைத் தலைவர் பதவிக்கு ஜி.கண்ணன், காரைக்குடி நாராயணன் மற்றும், செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் பொருளாளர் பதவிக்கு பாலசேகரனும் இணைச் செயலாளர்கள் பதவிக்குக் கவிஞர் முத்து லிங்கம், சின்னி ஜெயந்த், ரத்தினகுமார், மற்றும் மங்கை அரிராஜனும் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, ராஜா, ஜெயப்பிரகாஷ், அஜயன் பாலா, ஹேமமாலினி, ராஜேஷ்வர், வேல்முருகன், பா.விஜய், பாபுகணேஷ், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜா கார்த்திக், பாலாஜி சக்திவேல், மற்றும் சேகர், ஆகியோரும் போட்டியிட்டனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணியில், தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரும், துணைத் தலைவராக ரவிமரியா, மனோபாலா ஆகியோர் போட்டியிட்டனர். அவர்களுடன் செயலாளர் பதவிக்கு மனோஜ் குமாரும், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணாவும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு ரங்கநாதன், மதுரை தங்கம், சண்முகசுந்தரம், பிரபாகர் ஆகியோரும் போட்டியிட்டனர்.

மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சாய்ரமணி, பேரரசு, ஷரவணன் சுப்பையா, ராதாரவி, சினேகன், சாந்தகுமார், பொன்ராம், ஏ.வெங்கடேஷ், விவேகா, யுரேகா, சரண், சிங்கம்புலி, ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் கே.பாக்யராஜ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தமாக 356 வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ் ஏ சந்திரசேகர் 150 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். செயலாளர் பதவிக்கு பாக்யராஜ் அணியைச் சார்ந்த லியாகத் அலிகான் 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ் ஏ சந்திரசேகர் அணியைச் சார்ந்த மனோஜ் குமார் 151 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %