திறந்தவெளியில் தரையிலேயே கிடக்கும் மின் பவர் அதிகம் வரும் மின் ஒயர்கள். தினசரி ஆயிரக்கணக்கான பேர் நடக்கும் இடத்தில் ஹைமாஸ் லைட் மின் ஒயர் பல மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் தொடரும் அவல நிலை. மின்சாதனப்பெட்டி அமைத்து ஹைமாஸ் விளக்கு மின் கம்பத்தை பராமரிக்கப்படுமா?
கடலூர் பேருந்து நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் இருக்கும் ஹை மாஸ் விளக்கு மின் கம்பத்திற்கு மின்சாரம் செல்லும் ஒயர்கள் திறந்த வெளியிலேயே பல மாதங்களாக தரைத்தட்டி கிடப்பதால் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பேர் வந்து செல்பவர்கள் அந்த இடத்தில் ஆட்டோ ஏறவும் ஒதுக்குப்புறமாக இருப்பதால் சிறுநீர் கழிக்க போகும் மக்கள் கவனக்குறைவாக காலால் மிதித்தாலோ அதிக மின்னழுத்தம் ஒயர் மூலம் வருவதால் மிதித்த உடனே அடுத்த நிமிடமே பல உயிர்கள் போகும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் திறந்தவெளியில் கிடக்கும் முறைகளை மின் சாதன பெட்டிகள் அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பேருந்து ஏற வரும் பொது மக்களும் புகார் தெரிவித்து செல்கின்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி