0 0
Read Time:4 Minute, 32 Second

மயிலாடுதுறை, செப்டம்பர்- 21;
மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை, பத்மவாசன் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறையின் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.

சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தாய்மை என்பது வரம். குழந்தையை எதிர் நோக்கி இருக்கின்ற போது கஷ்டங்கள் நிறைந்த சுவையான காலம், நம்முடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகான, சத்தான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். தாயக இருக்க கூடியவர்கள் நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி என்பது உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் வெகுசிறப்பாக நடத்தப் படுகிறது. நீங்கள் சத்தான உணவு உண்பதற்கு பாரம்பரிய உணவு கண்காட்சி இங்கு வைக்கப்பட்டுள்ளது. அரசின் மூலம் கிடைக்க கூடிய நலத்திட்டங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க வேண்டும். சாதிக்க முடியும். கர்ப்பிணி பெண்களாகிய நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நல்ல சிந்தனையுடன் இருக்க வேண்டும். எல்லா கர்ப்பிணி பெண்களும் அங்கன்வாடி மையங்கள் மூலம் சொல்லப்படும் அறிவுரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரதுறை மூலம் பரிசோதனைகளை நாம் செய்து கொள்ளவேண்டும். கரப்பிணி பெண்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைவரும் தாய் சேய் நலமாக இருக்க வேண்டும். அழகான மற்றும் ஆரோக்கியமான குழந்தை பிறக்க அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ஊட்டச் சத்து மாத விழா கண்காட்சி, பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள். மாவட்ட ஊராட்சிதலைவர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மங்கை உமாமகேஸ்வரி சங்கர், நகர்மன்ற தலைவர்கள் எம்.செல்வராஜ், துர்கா பரமேஸ்வரி, ஒன்றிய குழு தலைவர்கள் காமாட்சி மூர்த்தி, மகேந்திரன், நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சிதலைவர் சுகுணசங்கரி குமரவேல், மாவட்ட திட்ட அலுவலர் அ.தமீமுன்னிசா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ந.சாந்தி, இரா.கிருத்திகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %