மயிலாடுதுறை, செப்டம்பர்- 22;
மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினையும், அகரகீரங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் தூர்வரும் பணி, கழிவறை கட்டும் பணி, மெழுகுவர்த்திகூடம் அமைக்கும் பணி, தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரியில் பெரியார் சமத்துவபுரத்தில் புதிதாக வீடு கட்டும் பணி, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், மகளிர் கூட்டுறவு அங்காடி ஆய்வு, அங்கன்வாடி குழந்தைகளுடன் கலந்துரையாடல், காளகஸ்திநாகபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் ஆய்வு, செம்பனார்கோயிலில் சமுதாய வளைகாப்பு விழா, இரத்த சோகை விழிப்புணர்வு முகாம், மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி பால்பண்னை அருகில் புதிய மாவட்ட பணிகளையும் அரசின் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி போன்ற திட்டங்களையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குநர் வி.அமுதவள்ளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டதை ஆய்வு செய்த பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குநர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு எல்லா மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. நானும் சாப்பிட்டுப் பார்த்தேன் உணவு மிகவும் சுவையாக இருந்தது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கல்வி கற்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. இதன் பலனை நான் நேரடியாக பார்த்தேன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குநர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட சேந்தங்குடி நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினையும், அகரகீரங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூபாய் 12.90 லட்சம் செலவில், அய்யனார் கோவில் குளம் தூர்வாரும் பணியினையும், ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூபாய் 1.75 லட்சம் செலவில், கழிப்பறை வசதி அமைக்கும் பணியினையும், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூபாய் 3.5 லட்சம் செலவில், மெழுகுவர்த்தி கூடம் அமைக்கும் பணியினையும், தரங்கம்பாடி வட்டம், காட்டுச்சேரி பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில், சமத்துவப்புரம் திட்டத்தின் கீழ், ரூபாய் 4.52 கோடி செலவில், புதியதாக 95 வீடுகள் கட்டும் பணியினையும், காட்டுச்சேரி பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில் மகளிர் கூட்டுறவு அங்காடியில், பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவு பொருட்களின் தரத்தினையும், காட்டுச்சேரி பெரியார் நினைவு சமத்துவப்புரம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின், கற்றல் திறனையும், குழந்தைகளுடன் கலந்துரையாடியும், காட்டுச்சேரி பெரியார் நினைவு சமத்துவப்புரம் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தும், காளகஸ்திநாதபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஆய்வு செய்தும், மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி பால்பண்னை அருகில் ரூ.114 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டுவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மேலும் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் துறையின் சார்பில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவிளும் மற்றும் இரத்த சோகை விழிப்புணர்வு முகாமிலும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. லலிதா, நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குர் எஸ்.முருகண்ணன், இணை இயக்குநர் சேகர், உதவி இயக்குநர் மஞ்சுளா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் ஜெ.பாலாஜி, செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர் சணல்குமார் ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்) அ.தமீமுன்னிசா, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் மற்றும் வருவாய்துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, சமுக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை, கூட்டுறவு துறை ஆகிய துறையே சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்