உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2021-2022 கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 8,588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்கள் எந்தவித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதனால், உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளி நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அந்த மாணவர்களை தனித்தனியே தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை வழங்குவதற்காகவே விவரம் சேகரிக்க உள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் செல்போன் எண், மதிப்பெண், முகவரி உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி சேராமல் மாணவர்கள் வேலைக்கு சென்றிருக்கலாம் என்பதால் அவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.