0 0
Read Time:1 Minute, 57 Second

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம், சட்டமன்ற கூட்டம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 8 ஆவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 7-வது அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஒரு மாத காலத்திற்குள்ளாக அடுத்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. முந்தைய அமைச்சரவை கூட்டங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், இந்த கூட்டம் 30 நிமிடங்களுக்குள்ளாக முடிவடைந்தது.

அக்டோபர் 10 முதல் 13 வரை சட்டமன்றத்தை கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதால் துறை வாரியாக அமைச்சர்கள் தயாராக அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி அவசர சட்டம், அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி, டேவிதார் ஆணையங்களின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதுகுறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

மழை, வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில், துறை வாரியான செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %