0
0
Read Time:1 Minute, 2 Second
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அம்மா சிறு மருத்துவமனையை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வேதாரண்யத்தை அடுத்த அவுரிக்காடு ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவு பகுதி, பெயா் பலகை ஆகியவற்றை அதே பகுதியை சோ்ந்த சுதாகா் (25) செவ்வாய்க்கிழமை இரவு சேதப்படுத்தினாா். இதைத் தடுக்க முயன்ற மருத்துவமனை உதவியாளா் செளரிராஜனை மிரட்டியதோடு, அரசுப் பணியை செய்ய விடாமல் அவரை தடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுதாகரை தேடி வருகின்றனா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.