மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் ர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள் காந்தி சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை முன்பு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் மிதிவண்டி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது, கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி மண்டபம் வரை நடைபெறுகிறது. உலக அமைதியை வலியுறுத்தி நடைபெறும் இந்த மிதிவண்டி பேரணியில் 350 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.