கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டைகளால் விபத்துகள் ஏற்படுத்தும் அபாயம்.
மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வளர்க்க வேண்டும் என்ற அரசு விதிமுறை இருந்தும் அதற்கான மரக்கன்றுகளை வைத்து வளர்க்காமல் சாலை விரிவாக்கம் செய்து வரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை
கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்வதற்காக சாலையில் உள்ள இரு பக்கங்களிலும் உள்ள புளிய மரங்களை வெட்டி சாலையை விரிவாக்கம் செய்து வருகின்ற பணி நடைபெற்று வருகிறது. இதில் சுப்ரமணியபுரம் வன்னியர் பாளையம் வழுதலம்பட்டு உள்ளிட்ட ஊரில் உள்ள சாலையில் நடுவே தடுப்பு கட்டைகள் அரைகுறையாக கட்டி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன மேலும் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வெட்டி சாலை விரிவாக்க பணி செய்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க அதற்கு ஈடான மரக்கன்றுகளை வளர்த்து பராமரிக்க வேண்டும் என அரசு விதிமுறை இருந்தும் தேசிய நெடுஞ்சாலை துறைகள் இன்னும் அதை கடைப்பிடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
ஆகையால் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் சாலை விரிவாக்க பணி நடக்கும் இடத்தை ஆய்வு செய்து சாலை விபத்துகளை தடுக்க சாலைகளின் நடுவே தடுப்பு கட்டையை உடனடியாக கட்டி முடிக்கவும் சுற்றுபுறசூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் விபத்துகளை ஏற்படுத்தாமல் இருக்க சாலை நெடுக்கிலும் எச்சரிக்கை பலகைகளும் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்