சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க கட்டட வளாகத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனர் பால் பி. ஹாரிஸ் அவர்களின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த விழாவில் சிலையை செய்து அனுப்பி வைத்த பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் ரோட்டரி ஆளுநர் பக் சிங் பண்ணு அவர்கள் நேரில் சிதம்பரம் வந்து ரோட்டரி கட்டிடவளாகத்தில் நிறுவப்பட்ட சிலையை இன்று திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இவருடன் ரோட்டரி ஆளுநர் திரு வி செல்வநாதன் ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் திரு சுந்தரலிங்கம் திரு ஆனந்தன் மற்றும் துணை ஆளுநர் எம் தீபக் குமார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். ரோட்டரி கட்டடம் கட்டுவதற்கும் சிலை அமைப்பதற்கும் ஆரம்பத்தில் இருந்து முயற்சிகள் மேற்கொண்ட சாசன தலைவர் பேராசிரியர் ஞாண. அம்பலவாணன், பொறியாளர் எஸ் மோகன் அவர்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கு சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் முன்னாள் உதவி ஆளுநர்கள் பேராசிரியர் கே. கதிரேசன் திரு கமல்சந்த், திரு. சஞ்சீவி திரு. பச.மணிவண்ணன் திரு. ஜி. ரவி திரு. புகழேந்தி, திரு.பி. பாரி, திரு. ஏ. நாசர், திரு. ஜாபர் அலி, திரு. திரு மோதிலால், திரு. கே.நாகராஜன், அனைவரும் கே கோவிந்தராஜ், தமிழ் பாத்திர மாளிகை சி. தியாகராஜன், திரு முரளி முனைவர் ரகுபதி டீ.குமார், கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன், பொருளாளர் எல். சி.ஆர். கே, நடராஜன், மேலும் சிதம்பரம் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த முன்னாள் ஆளுநர் டாக்டர் அருள்மொழிச் செல்வன், முனைவர் ஆனந்த ராமன்,
திரு ஜெயராமன், திரு. சித்தார்த்தன், முனைவர் யாசின் ஷெம்போர்ட் தாளாளர் விஸ்வநாதன்,
கண்ணங்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் திரு சரண்யா ராஜேஷ் கண்ணன் மற்றும் உசுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கஜபதி பிரகாஷ் கணேசன் மேலும் பலர் கலந்து கொண்டனர். திரு தனவேல் திரு சுரேந்திரன் விழா ஏற்பாடுகளை செய்தனர். இறுதியில் செயலாளர் முனைவர் கே சின்னையன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி