மயிலாடுதுறை, அக்டோபர்- 12;
மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், வட்டாட்சியர் அலுவலகம், பொது இ சேவை மையம், மக்களைத் தேடி மருத்துவம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சென்னை கன்னியாக்குமரி சிறப்புச் சாலைத் திட்டம் போன்ற திட்டங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனருமான வி.அமுதவள்ளி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறையின் பின்பற்றபடுகின்ற பதிவேடுகள். கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் பொது இ சேவை மையத்திலும், தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் காசநோய் சிகிச்சை பிரிவு. ஆய்வகம் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த புற நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து குட்டியாண்டியூரில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை ஆய்வு செய்தார்.
சுற்றுலாத்துறையின் சார்பில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தரங்கம்பாடி கடற்கரை சுற்றுலா தளத்திற்கு இணையாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளையும், டேனிஷ் கோட்டையிலுள்ள அகல் ஆய்வையும் மற்றும் ஆளுனர் மாளிகையும் ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் காவேரிபூம்பட்டினம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தினை பற்றியும், கலைஞரின் ஒருகிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் பற்றியும், ஊராட்சியின் வரவு-செலவு பதிவேடுகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பதிவேடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் ஊராட்சியில் நடைபெற்று வரும் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மீனவர்கள் மற்றும் தூய்மை காவலர் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
காவேரிபூம்பட்டினம் புதுக்குப்பம் மீனவர் குடியிருப்பு அருகில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 10 இலட்சம் செலவில் மீன் உலர்த்தும் தளம் அமைக்கும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சிகள் துறை இணை இயக்குநர் எஸ்.முருகண்ணன், இணை இயக்குநர்(வேளாண்மை) சேகர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் குமரகுருபரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கனகராஜ் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணா சங்கரி, தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, சுற்றுலாத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்