தரங்கம்பாடி,அக்.13:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்களாச்சேரி ஊராட்சி, ஆயப்பாடி பள்ளிவாசலில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செ. முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு அப்துல் மாலிக், மாவட்ட அனைத்து ஜமாத் முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர். செம்பை திமுக ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக் வரவேற்று பேசினார்
நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் 81 உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.
இதில் அனைத்து ஒன்றிய திமுக செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர்கள், மயிலாடுதுறை மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் கிளை திமுக நிர்வாகிகள், அனைத்து ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: ஆயப்பாடி பள்ளிவாசலில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளிவாசல் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் வழங்கியபோது
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்