கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உளவியல் துறையில் மன நலம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் முனைவர் ச.பிரகதீஸ்வரன் வழிகாட்டுதலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கோகலே ஹாலில் நடைபெற்றது.
கருத்தரங்கை கௌரவப் பேராசிரியர் முனைவர் வி.சுரேஷ் அவர்கள் துவக்கி வைத்து “மன வலிமை” என்ற தலைப்பில் உரையாற்றினார். ரோட்டரி செயலாளர் முனைவர் க. சின்னையன் “விடாமுயற்சியும் வெற்றியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பேராசிரியர் முனைவர் ஆர். நீலகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார். உளவியல் துறை தலைவர் பேராசிரியை முனைவர் திருமதி. ராஜலட்சுமி தலைமை உரையாற்றினார் நிகழ்ச்சியில் 150 உளவியல் துறை மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர் விரைவில் துறை பேராசிரியர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் மாணவர் தலைவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி