0 0
Read Time:4 Minute, 3 Second

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியாவை ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று மதியம் கல்லூரி மாணவி சத்தியா அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் தப்பியோடிய கொலையாளி சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காதல் பிரச்னையில் கொலை நடந்துள்ளது தெரியவந்தது. கடந்த 4 மாதத்திற்கு முன் ஏற்பட்ட பிரச்சனையில் சதீஷ் சத்தியாவை கன்னத்தில் அறைந்ததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பின் சதீஷை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு வெளியே விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

சத்தியாவிற்கு வேறொரு நபருடன் திருமணம் பேசி முடித்ததை அறிந்த சதீஷ் நேற்று மதியம் கல்லூரி செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சத்தியாவை அங்கு வந்த சதீஷ் ரயி முன் தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது மக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பியோடியதாகவும் போலீசாரின் விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே மகள் இறந்த சோகம் தாங்க முடியாமல் சத்தியாவின் தந்தை மாணிக்கம் நேன்று அதிகாலை மதுவில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இருவரது உடலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றது. பின்னர் பழவந்தாங்கல் கண்ணன் காலனியில் உள்ள மின் மயானத்தில் இருவரது உடலும் தகனம் செய்யப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்து கொலையாளி சதீஷை போலீசார் சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில், சதீஷுக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நடுவர் மோகனாம்பாள் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சதீஷை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே கொல்லப்பட்ட சத்தியா குடும்பத்தார் தரப்பில் சதீஷ் மீது இதுவரை 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளதாகவும், போலீசாரின் அலட்சியமே இந்த இரு உயிரிழப்பிற்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சத்தியா கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %