மயிலாடுதுறை, அக்டோபர் 15;
மயிலாடுதுறை மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர செயலாளரும், மயிலாடுதுறை நகர் மன்ற தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் தலைமை வகித்தார்.
இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளருமான மகா.அலெக்ஸாண்டர் வரவேற்று பேசினார்.
மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், ஞான.இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவதாஸ், மருது, ராமச்சந்திரன், சுரேஷ், ஜூபையர்அகமது, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சந்தோஷ், சுற்றரசன், மோகன்தாஸ், செந்தில்குமார், கேசவன், இளையராஜா, செந்தில், நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி கல்யாணம், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி எம் ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்செல்வன், சத்தியசீலன், அன்பழகன், ஜெகவீர பாண்டியன், எம் எம் சித்தி, பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பேருரை ஆற்றினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணியினர் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தி வேண்டாம் போடா என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் நன்றி உரையாற்றினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்