0
0
Read Time:1 Minute, 23 Second
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
மயிலாடுதுறை கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய திட்டு கிராமங்களை வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆற்றில் யாரும் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 5-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.