குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது.
இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. கடந்த 26ம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இந்நிலையில் பாலத்தில் நேற்று 500க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது.
மேலும் இதுவரை விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் அகமதாபாத்தில் இன்று நடைபெறவிருந்த பாஜக பேரணியை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பிரதமர் மோடி இன்று சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் செல்வார் என்றும் கூறப்படுகிறது.