0 0
Read Time:2 Minute, 41 Second

டெட் தேர்வு தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என அண்மையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன், வாரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

2008/ 2009ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, நியமனம் பெற்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தனியாக பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 /2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு தனியே பணி வரன்முறை செய்ய வேண்டியதில்லை. மேலும் தற்காலிக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, வழங்கப்படும் நியமனங்களுக்கும் நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாக காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கும் தனியே பணி வரன்முறை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணை பள்ளிக்கல்வித்துறை சார்பில் 15.11.2011 வெளியிட்ட பிறகு, பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களில் பணி நியமனத்துக்கான ஆசிரியர் தேர்வு வாரிய விளம்பரம் 23.8.2010க்கு முன்னரே வெளியாகி இருப்பின், அவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %