0 0
Read Time:2 Minute, 20 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம், சிதம்பரம் பழநி பாபு அணி வணிகம் இணைந்து, சிதம்பரம் அம்பலத்தாடி மடம் தெருவில் உள்ள நூற்றாண்டு கடந்த நகராட்சி தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு தேவையான மரத்தால் ஆன 10-பெஞ்சுகள் ஒரு மேஜை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணி வரவேற்புரை நல்கினார்.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ப.ராஜசேகரன் தலைமை வகித்தார். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவர் பி. முஹம்மது யாசின், வரலட்சுமி கேசவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பழநி பாபு அணிவ வணிகத்தின் உரிமையாளர் பா. பழநி, ஜோதிமணி பழநி கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் 10 மரபெஞ்சுகள் ஒரு மேஜை, ரூபாய் 75 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மண்டலத்தின் துணை ஆளுநர் எம். தீபக்குமார், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பொருளாளர் கேசவன், பன்னாலால் ஜெயின், சிவராம வீரப்பன், முத்துகுமரேசன்,சதீஷ், ஹபிபுல்லா, இன்னர் வீல் செயலாளர் முத்து நாச்சியம்மை சிதம்பரம், பொருளாளர் அனிதா தீபக்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நெகிழி பொருள் இல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மருந்தகங்களில் மருந்துகள் வைக்கும் காகித பைகள் வழங்கப்பட்டது. நன்றி உரை சங்கத்தின் செயலாளர் வெ. ரவிச்சந்திரன் கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %